கிங்ஸ்டன்: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரையும் இந்தியா வென்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் போட்டி கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. இதில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 


இந்தநிலையில், நேற்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 


இதனையடுத்து இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரரான கே.எல். ராகுல் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார். நம்பிக்கையுடன் அடுத்த வந்த புஜாரா 6 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க அகர்வாலுடன், கேப்டன் விராட் கோலி இணைந்து ஆடினார்கள். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ரன்னை உயர்த்தினார்கள். சர்வதேச டெஸ்டெஸ்ட் போட்டியில் 3வது அரை சதத்தை பதிவு செய்த மயங்க அகர்வால் 55 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். நன்றாக ஆடி வந்த விராட் கோலி தந்து 22 அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 76 ரன்கள் இருந்த நிலையில் அவுட் ஆனார். ரகானேவும் 24 ரன்னில் அவுட் ஆனார். 


ஹனுமா விஹாரி மற்றும் ரிஷாப் பந்த் களத்தில் உள்ளனர். விஹாரி 42* ரன்னுடனும், ரிஷாப் 27* ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இரண்டாவது நாளான இன்று இவர்கள் தொடர்ந்து ஆடுவார்கள். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்துள்ளது. 


வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், கேமர் ரோச் மற்றும் ரஹீம் கார்ன்வால் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.