சென்னையில் நடைபெற உள்ள இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டி டிசம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது.


இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ. 1200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ, 6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.