U19 WC அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்திய அணி
2022 U19 ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பார்படாஸ்: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதுகிறது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, இந்திய அணி இறுதிப் போட்டியில் சாதிக்கும் என்ற உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை காலிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணியை பொறுத்தவரை 10 முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பயிற்சி ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ | பிரெட்லீ பந்துவீச பயந்த இந்திய ஜாம்பவான்..!
ஆண்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதி ODI போட்டியில் இந்திய அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்தியாவின் துல் மற்றும் ரஷீத் இணைந்து 204 ரன்கள் எடுத்து அற்புதமான கூட்டணி அமைத்தனர்.
இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகலை பறிகொடுத்து 290 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணியின் ரவிக்குமார், நிஷாந்த் சிந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஆங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் கௌஷல் தம்பே ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டைப் பெற்றனர், ஆஸ்திரேலியா 291 ரன்கன் இலக்கை எட்ட முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.
ALSO READ | ஐபிஎல் மெகா ஏலம்: அதிகார்வப்பூர்வ தேதி அறிவிப்பு!
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, 41.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது U19 இந்திய அணியின் நான்காவது தொடர்ச்சியான வெற்றியாகும்.
முதலில் பேட் செய்த இந்திய அணியின் ஷேக் ரஷீத் (94) யாஷ் துல் (110) கூட்டணி, இந்தியாவிற்கு பலமாக இருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் பவுலர்களால், இந்திய அணியின் இளம் சிங்கங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி, கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கைகளையும் இந்திய அணியின் அரையிறுதிப் போட்டியின் அபார வெற்றி விதைத்திருக்கிறது.
ALSO READ | U19 WC: இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளப்போவது யார்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR