உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Rohit Sharma Injured: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பு ரோஹித் சர்மாவுக்கு காயம். நெட் பயிற்சியின் போது இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. மீண்டும் அவர் பயிற்சிக்கு செல்லவில்லை. என்ன நடந்தது முழு விவரத்தை பார்ப்போம்.
WTC Final, Ind Vs Aus: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, நெட் பயிற்சியின் போது ரோஹித்தின் இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு அவர் பயிற்சிக்கு செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது. காயம் எவ்வளவு பெரியது என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை, எனவே ரோஹித்தின் இருப்பு குறித்து இதுவரை எதுவும் கூற முடியாது. அதேநேரத்தில் அவருக்கு காயம் பெரிதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஜூன் 7 முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஒரு நாளுக்கு முன்னதாக, கட்டை விரலில் அடிபட்டதால் இந்திய அணி கேப்டன் பயிற்சி செய்வதை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பிளாக்பஸ்டர் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பது குறித்த இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரும்.
மேலும் படிக்க - WTC Final 2023: சச்சின், டான் பிராட்மேனின் சாதனைகளை தகர்க்கப்போகும் விராட் கோலி..!
டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தூக்கு காயம் ஏற்பட்டது:
முன்னதாக டி20 உலகக் கோப்பையின் போது ரோஹித் சர்மாவும் காயம் அடைந்தார். இந்த காயம் 8 நவம்பர் 2022 அன்று, அதாவது இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு வலை பயிற்சியின் போது ஏற்பட்டது. ரோஹித் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடி 27 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி புதன்கிழமை முதல் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
மேலும் படிக்க - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுண்ட்டவுன் ! ரோஹித் ஷர்மாவுக்கு குவியும் பாராட்டு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணிகள் விவரம்:
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).
ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித் (விசி), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
மேலும் படிக்க - WTC Final: ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர் காயம்! குஷியில் இந்திய அணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ