ICC கனவு அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக கோலி...
ICC ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்!
ICC ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணியை ICC அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 2018-ஆம் ஆண்டிற்கான ICC கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் கனவு அணி என இரு அணிகளை ICC அறிவித்துள்ளது, இந்த இரு அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் டெஸ்ட் கனவு அணியில் கோலியை தவிற இந்திய வீரர்கள் ரிஷாப் பன்ட், ஜாஸ்பிரிட் பூம்ரா-வும் இடம் பிடித்துள்ளனர். ஒருநாள் கனவு அணியை பொருத்தவரையில் இந்திய வீரர்கள் ரோகித் ஷர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஜாஸ்பிரிட் பூம்ரா இடம்பிடித்துள்ளனர்.
அதேவேலையில் வளர்ந்து வரும் டெஸ்ட் வீரராக இந்திய அணியின் ரிஷாப் பன்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டியில் ரிஷாம் பன்ட் 159 ரன்கள் குவித்தது மட்டும் அல்லாமல், கடைசி வரை ஆட்டமிழக்கமால் அணியின் வெற்றிக்கு போராடினார். அத்துடன் ஆஸ்திரேலியா மண்ணில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார். அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிகப்படியாக 11 கேட்ச் பிடித்து முந்தைய சாதனையினை சமன் செய்தார்.
இதன் காரணமாக ICC டெஸ்ட் கனவு அணியில் முதன் முறையாக ரிஷாப் பன்ட் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.