உலகக் கோப்பை தகுதி சுற்று; ஓமானை எதிர்கொள்ளும் இந்தியா...
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி ஓமானை எதிர்கொள்கிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி ஓமானை எதிர்கொள்கிறது.
இந்தியா இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. தகுதி சுற்றில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, வெளி வாய்ப்பை பெற வழிவகுக்கும். அந்த வகையில் வரவிருக்கும் போட்டியில் ஓமானை இந்தியா வென்றாகவேண்டியது அவசியம் ஆகும்.
முன்னதாக கவுகாத்தியில் நடைப்பெற்ற முதல் போட்டியில் ஓமானிடன் இந்தியா தோல்வியை பதிவு செய்தது. இப்போட்டியின் முதல் பாதியில் சுனில் சேத்ரி கோல் அடித்ததால் இந்தியா முன்னிலை பெற்றது, என்றபோதிலும் இரண்டாம் பாதியில் ஓமான் இரண்டு கோல் அடித்து வெற்றியை தனது வசமாக்கியது.
அதேப்போல் நவம்பர் 14-ஆம் தேதி நடைப்பெற்ற போட்டியில் வங்கதேசத்தினை (4-1) என்ற உறுதியான கோல் கணக்கில் வென்று ஓமான் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களம்காண்கிறது.
மறுபுறம், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள வங்கதேச அணி மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. எனினும் அவர்கள் ஆசிய சாம்பியனான கத்தார் அணியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை செய்ததும், புள்ளிப்பட்டியலில் சற்று மாற்றம் ஏற்பட்டது.
தற்போதைய நிலைவரப்படி ஆசிய குரூப் E பட்டியலில் கத்தார் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஓமான் 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், 3 புள்ளிகள் குவித்துள்ள இந்தியா 4-வது இடத்திலும், 1 புள்ளி மட்டும் பெற்றுள்ள வங்கதேசம் 5-ஆம் இடத்திலும் உள்ளது.
எதிர்வரும் ஓமானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு ஒரு புள்ளி கிடைத்தால், 2023 ஆசிய கோப்பை தகுதிப் போட்டிகளுக்கான தானியங்கி மூன்றாவது சுற்று இடத்தைப் பெறுவதற்கான முயற்சியில் இந்தியாவிற்கு இந்த புள்ளி உதவியாக அமையும்.
இது 2023 ஆசிய கோப்பை மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ள அணிகளுக்கான கூட்டு தகுதி சுற்று மற்றும் எட்டு குழுக்களில் இருந்து சிறந்த நான்கு நான்காவது இடங்கள் ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளின் சந்திப்பின் தகுதிச் சுற்றில் மூன்றாவது சுற்றில் தானாகவே ஒரு இடத்தைப் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.