இந்திய மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கிந்திய அணியுடனான போட்டியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பங்கேற்று தனது சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்திய ஜுலன் கோஸ்வாமி, தற்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


35-வயது ஆகும் ஜுலன் கோஸ்வாமி இந்திய கிரிக்கெட் அணிக்ககா 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்போட்டிகளின் மூலம் 56 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியுள்ளார். கடந்த மார்ச் 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை இவர் எடுத்தும் இதில் அடங்கும்.


மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை தக்கவைத்துக் கொண்ட இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு தனது முதல் டி20 போட்டியினை இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஜுலன் கோஸ்வாமியின் அறிவிப்பினை அடுத்து அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என BCCI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மகளிர் கிரிக்கெட் அணியும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய பிராத்திப்பதாக தெரிவித்துள்ளனர்.


இந்திய மகளிர் அணியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையினை பெற்ற ஜுலன் கோஸ்வாமி, இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் மற்றும் 169 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கடந்த முதல் பெண் பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் இவர் பெற்றுள்ளார்.