CWG 2022 | பேட்மிண்டன் மகளிர் போட்டி - தங்கம் வென்றார் பி.வி. சிந்து
காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையரி பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்று அசத்தினார்.
இங்கிலாந்தில் இருக்கும் பர்மிங்ஹாமில் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்துவருகின்றன.ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இறுதி நாளான இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்துவும், கனடாவின் மிச்செல்லா லீயும் எதிர்கொண்டனர். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியாவின் சிந்து தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.
இறுதியில் சிந்து, லீயை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார் பி.வி.சிந்து. இதுதொடர்பாக பி.வி. சிந்து பேசுகையில், “இந்தத் தங்கப் பதக்கத்துக்காவே நீண்ட காலம் காத்திருந்தேன். நான் இப்போது சூப்பர் ஹேப்பி” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தங்கப்பதகம் வென்ற பி.வி. சிந்துவுக்கு பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துவருகின்றனர்.
காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளான இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர் பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளதால், இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியா இதுவரை 19 தங்கங்கள், 15 வெள்ளிகள், 22 வெண்கலங்கள் என மொத்தம் 56 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | CWG 2022: ஆஸ்திரேலியாவிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!
முன்னதாக, 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முடிந்தது மேற்கிந்திய தீவுகள் தொடர்! மீண்டும் குழப்பத்தில் பிசிசிஐ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ