முதல் இன்னிங்சில் இந்திய அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி நேற்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 


முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர். 


இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய குறுகிய நேர இடைவெளியில் பூஜார(153) மற்றும் ரகானே(57) வெளியேறினர். பின்னர் களமிறங்கிய சஹா 16 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு அஸ்வின் தான் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அஸ்வின் அரைசதம் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் எதிரார்த்த நிலையில் தற்போது  47 ரன்னில் ஆட்டம் இழந்தார்.


அதன் பிறகு ஜடேஜா 15(24) ரன்களில் வெளியேற, பிறகு களமிறங்கிய முகம்மது ஷமி அதிரடி ஆட்டத்தால் 30(30) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஹார்திக் பாண்டியா டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர் 49 பந்தில் 50 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் 11(10) அவுட் ஆகாமல் இருந்தார்.


இந்திய அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்து உள்ளது. இலங்கை சார்பில் நுவன் பிரதீப் 6 விக்கெட்டும், லஹுரு குமார 3 விக்கெட்டும், ரங்கன ஹேரத் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.