இந்தியாவிற்கு வெற்றி இலக்கு 294 ரன்கள் மட்டும்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆசி., பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் துவக்க ஆட்டகாரர்களாக ஆரோன் பிஞ்ச் 124(125) மற்றும் டேவிட் வார்னர் 42(44) களமிரங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். எனினும் இதர வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஸ்மித் 63(71) அவருக்கு துனை நின்றார். இதனால் அணியின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. எனினும் ஆசி., 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்தியாவிற்கு 294 ரன்கள் வெற்றி இலக்காக நிர்னயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் இன்று நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு இன்றைய போட்டி முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.