இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.


இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பின்னர் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களம் இறங்கினர். இந்திய அணி வீரர்கள் ஆரம்பமே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் முரளி விஜய்(0) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் போல்ட் ஆனர். 


பின்னர் புஜாரா களம் இறங்கினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஏழாவது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் அவுட் ஆனர். புஜாராவுடன் இந்திய கேப்டன் விராத் கோலியும் இணைந்து நிதானமாக ஆடினார்கள். 25 பந்துகளை எதிர்க்கொண்ட புஜாரா 1 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். மீண்டும் மழை பெய்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.


சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. விராத் கோலியும் ரஹானேவும் ஆடினார்கள். விராட் கோலி 23 ரன்கள் எடுத்து அவுட் ஆக, பின்னர் வந்த ஹர்திக்11(10), தினேஷ் கார்த்திக்1(3) அவுட் ஆனார்கள். நிதானமாக ஆடி வந்த ரஹானே 18(44) ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு அஸ்வின் சற்று அதிரடியாக விளையாடி 29(38) ரன்கள் எடுத்தார். குல்தீப் மற்றும் இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். 


 



35.2 ஓவருக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டும், ஸ்டுவர்ட் பிராட் மற்றும் சாம் குரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அத்துடன் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுற்றது.


 



இன்று தொடங்கும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸ் விளையாடும்.