தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஒரே ஒருமுறை முன்னால் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்துள்ளது. இம்முறையாவது வரலாறு படைக்குமா? விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். 


இந்நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி 2 மணி அளவில் தொடங்கியது. டாஸ் வென்ற  தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. புவனேஸ்வர் குமார் தனது முதல் ஓவரிலேயே டீன் எல்கர்(0) அவுட் செய்தார். தனது இரண்டாவது ஓவரில் ஐடின் மார்கரம் 5(11), மூன்றாவது ஓவரில் ஹஷிம் ஆம்லா 3(10) அவுட் செய்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் மற்றும் ஏ.பி.டிவில்லியர்ஸ் விளையாடி வருகின்றனர்.


தற்போதிய நிலவரப்படி 9 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.