விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் சென்றுள்ளது. அந்த நாட்டுக்கு எதிராக மூன்று டி-20 போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி-20 போட்டி நடக்க இருப்பதால், நாளை நடைபெற உள்ள டி-20 போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியை பொருத்த வரை கடைசியாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் உள்ளது. மேலும் கேப்டன் விராட், ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது என சிறப்பாக செயல்படக்கூடிய பந்து வீச்சாளர்கள் உள்ளதால், இந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 


ஆஸ்திரேலிய அணியை பொருத்த வரை கடைசியாக நடைபெற தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நன்றாக செயல்படவில்லை என்பது அனைவரும் அருந்ததே. எனவே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதை இந்திய அணி எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதை நாளை நடைபெறும் போட்டியில் தெரியவரும்.


ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா மோதும் டி-20 முதல் ஆட்டம் நாளை 21 ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டி பிரிஸ்பேனில் உள்ள காப்பாவில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல்  1.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணிகளும் கடுமையான வலைபயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


நாளை நடைபெறும் முதல் டி-20 ஆட்டத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.