16:40 23-11-2018
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய இரண்டாது ஆட்டம் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆட்டம் கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



16:37 23-11-2018
தொடர்ந்து மழை பெய்து வருவதால் டிஎல்எஸ் முறைப்படி மூன்றாவது முறையாக 5 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு 5 ஓவர்களில் 46 ரன்கள் வெற்றி இலக்காக தரப்பட்டுள்ளது.



16:37 23-11-2018


தொடர்ந்து மழை பெய்து வருவதால் டிஎல்எஸ் முறைப்படி 11 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு 11 ஓவர்களில் 90 ரன்கள் வெற்றி இலக்காக தரப்பட்டுள்ளது.


 




மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் மழை குறுக்கிடலாம், மேலும் நேரம் கருதி 20 ஓவர் போட்டியை டிஎல்எஸ் முறைப்படி19 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 137 ரன்கள் என அறிவிக்ப்பட்டது.


இதனால் இந்திய அணிக்கு 19 ஓவர்களில் 138 ரன்கள் வெற்றி இலக்காக தரப்பட்டது.


 




15:01 23-11-2018


19 ஒவர்கள் முடிவில் மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!



தற்போதைய நிலவரப்படி ஆஸி., அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. ஆன்டிரிவ் டை 12(13), பென் மெக் டெர்மோட் 32(30) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



14:34 23-11-2018


06.3: WICKET! பூம்ரா வீசய பந்தில் ஸ்டோனிக்ஸ் 4(5) ரன்களில் வெளியேறினார்!



10.6: WICKET! குர்ணால் பாண்டயா வீசிய பந்தில் கெளன் மேக்ஸ்வெல் போல்ட்ஆகி வெளியேறினார்.
13.1: WICKET! அலெக்ஸ் கேற்றி குல்தீப் யாதவ் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
15.6: WICKET! நாதன் கொட்லர் புவனேஷவர் வீசிய பந்தில் வெளியேறினார்.


தற்போதைய நிலவரப்படி ஆஸி., 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 



14:01 23-11-2018
6.3: WICKET! பூம்ரா வீசிய பந்தில் மார்கஸ் ஸ்டோனிக்ஸ் 4(5) ரன்களில் வெளியேறினார்.



தற்போதைய நிலவரப்படி ஆஸி., 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் குவித்துள்ளது. கெளன் மேக்ஸ்வெல் 5(8) மற்றும் பென் டெர்மோட் 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



13:54 23-11-2018
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா அணி!


0.2: WICKET! பின்ச் 0(1) புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் ரிஷாப் பன்ட் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
3.5: WICKET! கிறிஸ் லெயன் 13(13) கலீல் அஹமது வீசிய பந்தில் வெளியேறினார்.
5.3: WICKET! ஆர்க்கி சார்ட் 14(15) கலீல் அஹமது வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.


தற்போதைய நிலவரப்படி ஆஸி., 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் குவித்துள்ளது!



இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக பிரிஸ்மேன் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது, இந்நிலையில் இன்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைப்பெற்று வருகிறது.


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது!