ஐந்தாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. இளம் வீரர் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனர். இந்தியா அணி 95 ஓவர் முடிவில் 282 ரன்கள் எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ரஹானே* 18(65) மற்றும் ஹர்திக் பாண்டியா* 0(2) விளையாடி வருகின்றனர். இந்திய அணி 450 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


 




இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 103 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தியா தற்போது நான்கு விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 449 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


 




இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராத் கோலியின் இரண்டாவது சதமாகும்.



 



மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் புஜாரா 72(208) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய கேப்டன் விராத் கோலியுடன் சேர்ந்து அஜிங்கியா ரஹானே விளையாடி வருகிறார். நிதானமாக விளையாடிய விராத் கோலி டெஸ்ட் போட்டியின் தனது 23வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். 


இவர் 194 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் ரஹானே 17(57) ரன்கள் எடுத்து ஆடு வருகிறார்.


 



 



83 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 257 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 84(163) மற்றும் ரஹானே 13(31) ரன்களும் எடுத்து ஆடு வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சதத்தை நோக்கி விளையாடி வருகிறார். ஒரு வேலை இந்த இன்னிங்க்ஸில் சதம் அடுத்தார் என்றால், இது விராத் கோலியின் 23 வது சதமாகும்.



உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய இந்திய அணி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. நன்றாக ஆடி வந்த புஜாரா 72(208) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது இந்திய கேப்டன் விராத் கோலியுடன் சேர்ந்து அஜிங்கியா ரஹானே விளையாடி வருகிறார். 75 ஓவர் முடிவில் இந்திய அணி 230 ரன்கள் எடுத்துள்ளது.


தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 398 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


 




மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று உணவு இடைவேளை வரை இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 362 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய கேப்டன் விராத் கோலி 54 ரன்களுடனும், புஜாரா 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


 




மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி நிதனமகா ஆடி வருகிறது. புஜாரா மற்றும் விராத் கோலி இருவரும் தங்கள் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளனர். 58 ஓவர் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா* 54(160); விராத்* 51(92) ரன்கள் எடுத்துள்ளன. இந்திய அணி இங்கிலாந்தை விட 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


 



 




3 வது டெஸ்டில் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா இங்கிலாந்தை 161 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, இரண்டாவது இன்னிங்சில் 124/2 என ஆடி வருகிறது.


இங்கிலாந்து எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3வது போட்டி 18 ஆம் தேதி ட்ரெண்ட் பிரிஜில் துவங்கியது.


டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் தவான் இருவரும் சற்று தாக்கு பிடித்தாலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 83/3 விக்கெட்டுகள் இழந்து தவிக்கையில் கேப்டன் மற்றும் துணை கேப்டன் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தனர்.


ரஹானே 81 ரன்களுக்கு, கோஹ்லி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, முதலாம் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 307/6 இருந்தது. ரிஷப் பண்ட் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.


இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா பிராட் மற்றும் ஆண்டர்சன் வசம் சிக்கி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இங்கிலாந்து அணியின் குக் மற்றும் ஜென்னிங்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். அதன் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். அதன் பிறகு, ஒருவர் பின் ஒருவரான ஆட்டமிழக்க 161 ரங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து. இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா 5 விக்கெடுகளை வீழ்த்தி அசத்தினார்.


இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய இங்கிலாந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் தவான் 44 ரன்களும் கே எல் ராகுல் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 124/2 என இருந்தது. புஜாரா மற்றும் கேப்டன் கோஹ்லி இருவரும் களத்தில் இருந்தனர்.


புஜாரா 33 ரன்களுடனும் கோஹ்லி 8 ரன்களும் எடுத்திருந்தனர். ஹார்திக் பாண்டியா டெஸ்ட் அரங்கில் தனது முதல் 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தற்போது 292 ரன்கள் முன்னிலையில் இந்தியா வலுவான இடத்தில் உள்ளது.