நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவெளி வரை இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா* 28(69) மற்றும் இந்திய கேப்டன் விராத் கோலி* 25(40) ஆடி வருகின்றனர். இங்கிலாந்தை விட 146 ரன்கள் பின்தங்கி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி இரண்டு விக்கெட் இழந்துள்ளது. லோகேஷ் ராகுல் 19(24) ரன்னிலும்,  ஷிகர் தவான் 23(53) ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து புஜாரா* 25(56) மற்றும் இந்திய கேப்டன் விராத் கோலி* 14(17) ஆடி வருகின்றனர்.


தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 25 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.


 




முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 246 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்திய அணி. பந்துவீச்சில் அசத்தியது இந்தியா. 19/0 என முதல் இன்னிங்சை துவங்கியது! 


இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று  போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.


இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார்.


அதன்பிறகு, இந்திய பந்துவீச்சில் திணற தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் பைர்ஸ்டாவ், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோரும்நிலைத்து நின்று ஆடவில்லை. இவர்கள் முறையே 6, 23 மற்றும் 21 ரன்கள் எடுத்து வெளியேறினர்.


ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 86/6 என தவித்தது. அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலி மற்றும் சாம் கர்ரன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் செய்து இருந்த போது, மொயின் அலி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


ரஷீத் மற்றும் பிராட் இருவரும் சொற்ப ரன்கள் முறையே 6, 13 ரன்களுக்கு வெளியேறினர். கடைசி வரை நின்று ஆடிய சாம் கர்ரன் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்திருந்தது.


இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், அஸ்வின், இஷாந்த் மற்றும் சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய துவக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் தவான் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


இதனால் முதல் நாள் முடிவில் இந்தியா 19/0 என இருந்தது. தவான் 3 ரன்களுடனும், ராகுல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.