INDvSL, டி-20 போட்டி: இலங்கை அதிரடி!! வெற்றி பெறுமா? இந்திய அணி
இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.
இலங்கை அணியின் மூன்றாவது விக்கெட் வீழ்ந்தது. விஜய் சங்கர் வீசிய பந்தில் இலங்கை வீரர் தரங்கா 24 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஃபோல்ட் ஆனார்.
பத்து ஓவர் முடிவில் இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
எட்டு ஓவர் முடிவில் இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
ஆறு ஓவர் முடிவில் இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட்டும் வீழ்ந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தில் இலங்கை வீரர் குசால் பெரேரா 4 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஃபோல்ட் ஆனார்.
இலங்கை அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது. எஸ்.என். தாகூர் வீசிய பந்தில் இலங்கை வீரர் குணதிலகா 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இரண்டு ஓவர் முடிவில் இலங்கை அணி 24 ரன்கள் எடுத்துள்ளது
கால தாமதமானதால் டி-20 ஓவர் போட்டியை 19 ஓவராக குறைப்பு.
டாஸ் வென்றது இந்தியா அணி. டாஸ் வென்றதை அடுத்து இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
மழை பெய்வது நின்றுவிட்டதால், மைதானத்தில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 8.5 மணிக்கு டாஸ் போடப்படும் என்றும், 8.20-க்கு கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் டி2-0 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இலங்கை அணி, தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது.
மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி, இலங்கை நிர்ணயித்த 215 ரன்களை சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது. மூன்று அணிகளும் தலா ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என்று சமநிலை வகிப்பதால் இந்த தொடர் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில், அதிகமான வெப்பம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என பிசிசிஐ அறிவித்துள்ளது.