விக்கெட் கீப்பராக 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி புது சாதனையினை படைத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையினை அவர் படைத்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 400 விக்கெட்டு எடுத்த முதல் இந்தியர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார்.


இந்த சாதனைப் பட்டியலில் உலகளவில் முதலிடம் பெற இன்னும் 83 விக்கெட்டுகளை டோனி கைப்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் முதலிடம் வகிப்பவர், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கர்காரா (482 - விக்கெட்), இவரை அடுத்து ஆஸி அணியின் ஆடம் கில்கிரிஸ்ட், தென்னாப்பிரிக்காவின் மார்க் பௌச்சர் ஆகியோர் உள்ளனர்..



சாதனை பட்டியல் விவரம்...


1. குமார சங்கர்காரா - 482
2. ஆடம் கில்கிறிஸ்ட் - 472
3. மார்க் பௌச்சர் - 424
4. MS டோனி - 400
5. மொயின் கான் - 287