#INDvsSL 2_வது ஒருநாள் போட்டி: இந்தியா அதிரடி; இலங்கை வெற்றி பெற 393 ரன்கள் தேவை
50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை வெற்றி பெற 393 ரன்கள் தேவை
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர். அதன் படி இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்கிறது.
எனவே தனது ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. 115 ரன்னுக்கு தான் இந்தியாவின் முதல் விக்கெட் வீழ்ந்தது. ஷிகார் தவான் 68(67) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து ஷிரியாஸ் ஐயர் ஆடி வருகின்றார்.
நன்றாக விளையாடி இருவரும் ஒருமுனையில் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது சதத்தை பூர்த்தி செய்தார். 173_வது ஒருநாள் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தனது 16_வது சதத்தை நிறைவு செய்தார். இவர் ஏற்கனவே இரண்டு இரட்டை சென்சூரி அடித்துள்ளார். இந்த போட்டியில் சதம் அடித்தன் மூலம் இவர் ஒரு நாள் போட்டியில் 6308 ரன்களை கடந்துள்ளார்.
மறுமுனையில் ஷிரியாஸ் ஐயர் 50(50) தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். 2_வது ஒரு நாள் போட்டி விளையாடும் ஷிரியாஸ் ஐயர் தனது முதல் அரை சதத்தை இலங்கைக்கு எதிராக அடித்து உள்ளார்.
தொடர்ந்து விளையாடிய ஷிரியாஸ் ஐயர் 88(70) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 9 பவுண்டரியும் 2 சிச்சரும் அடித்தார். பின்னர் வந்த முன்னால் கேப்டன் எம்.எஸ் தோனி 7(5) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டியா அதிரடியா ஆடினார்கள்.
கடைசியா ரோஹித் ஷர்மா தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இது இவரது மூன்றாவது இரட்டை சதமாகும். கடைசி வரை 208(153) ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஹார்திக் பாண்டியா 8(5) ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட் ஆனார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை வெற்றி பெற 393 ரன்கள் தேவை.
இலங்கை தரப்பில் திசரா பெரேரா தலா 2 விக்கெட்டும், சச்சித் பதிராணா தல ஒரு விக்கெட்டும் எடுத்தார்கள்.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.