ஐபிஎல் 2017: தகுதி சுற்று 2-க்கு செல்வது யார் ? கொல்கத்தா - ஐதராபாத் இன்று மோதல்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறவுள்ள சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் களம் காணும். அதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
கொல்கத்தா அணியைப் பொறுத்த வரையில் முந்தைய லீக் சுற்றில் மொத்தம் ஆடிய 14 ஆட்டங்களில் 8 ஆட்டதில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் அணியைப் பொறுத்த வரையில், லீக் சுற்றின் 14 ஆட்டங்களில் 8 வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் வார்னர் வழக்கம் போல் ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கலாம். இந்த சீசனில் அவர் அதிகமாக ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வார்னருக்கு அடுத்தபடியாக ஷிகர் தவன் இந்த சீசனில் 468 ரன்கள் குவித்துள்ளார்.
முந்தைய லீக் சுற்றுகளில் இரு முறை நேருக்கு நேர் மோதியுள்ள கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் (கேப்டன்), தன்மே அகர்வால், வில்லியம்சன், யுவராஜ் சிங், ரிக்கி புயி, பிபுல் சர்மா, பென் கட்டிங், ஷிகர் தவண், திவேதி, மொயிசஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், புவனேஷ்வர் குமார், அபிமன்யு மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், பரிந்தர் ஷரன், பிரவீண் தாம்பே, பென் லாக்லின், சித்தார்த் கவுல், முஸ்டாபிஜூர் ரஹ்மான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கவுதம் காம்பீர் (கேப்டன்), ராபின் உத்தப்பா, சுனில் நரேன், டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லின், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ், சயன் கோஷ், ஷெல்டன் ஜேக்சன், ஷாகிப் அல் ஹசன், பியூஸ் சாவ்லா.