ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியும், மும்பை அணியும் மோதுகிறது. இந்த போட்டி மும்பையில் நடக்கிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில்தான் தோற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த ஒரு தோல்வியை புனே அணிக்கு எதிராக மும்பை அணி சந்தித்தது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மும்பை வீரர்கள் இப்போட்டியில் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 


புனே அணியைப் பொறுத்த வரை சில போட்டிகளில் தோற்றபோதிலும், தங்கள் கடைசி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை கடைசி பந்தில் வென்றது அந்த அணிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் தோனியின் எழுச்சி அந்த அணிக்கு தன்னம்பிக்கையை கூட்டியுள்ளது.



புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி: 


ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ்ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங் குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க் அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ் டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்


மும்பை இந்தியன்ஸ் அணி: 


ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர், பார்த்தீவ் படேல், நிக் கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம், அம்பாட்டி ராயுடு, சிம் மன்ஸ், குல்வத் ஹெஜ்ரோலியா, கரண் சர்மா, சவுரப் திவாரி, அசெலா குணரத்னே, மிட்செல் ஜான்சன், ஹர்பஜன் சிங், மிட்செல் மெக்லீனஹன், ஸ்ரேயஸ் கோபால், சித்தேஷ் லாடு, வினய் குமார், கெய்ரோன் பொலார்டு, கிருனல் பாண்டியா, டிம் சவுத்தி, மலிங்கா, ஜகதீஷா சுஜித், நித்திஷ் ரானா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஜித்தேஷ் சர்மா, தீபக் பூனியா.