ஐபிஎல் தொடர் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை 3 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் அடி வாங்கி பஞ்சாப் அணிக்கு குஜராத்துக்கு எதிரான வெற்றி மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. சொந்த ஊரில் விளையாடுவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். 


நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. எனவே ஐதராபாத் 9 புள்ளிகளை பெற்றுள்ளது. உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணிக்கு 4 வெற்றிகளும் சொந்த ஊரில் கிடைத்தவை தான். அதே  சமயம் வெளியூரில் தடுமாறும் ஐதராபாத் அணி, அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் தயாராகி வருகிறது. இன்று நடக்கும் போட்டி பஞ்சாபில் நடக்க உள்ளது.


இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.