புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற 164 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு புனே அணி 163 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணி 164 ரன் இலக்கு கொடுக்கப் பட்டுள்ளது.


10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.


4-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட் அணிகள் மோதுகின்றன.


பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், மில்லர், ஹசிம் அம்லா, குப்பீல், மார்கன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். 


ரைசிங் புனே அணி பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.


இதனால் ரைசிங் புனே அணி மிகுந்த நம்பிக்கையுடன் பஞ்சாப்பை எதிர் கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் அவர்கள் முத்திரை பதிக்கும் வகையில் ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.