ஐபிஎல் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது. அதாவது எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அது முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 


குஜராத் லயன்ஸ் 10 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்வியை சந்தித்து 6 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் குஜராத் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு மிக குறைவு. மற்ற அணிகளின் ரன்ரேட்டை பொறுத்தே குஜராத் அணி அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மற்றபடி அந்த அணி இனி புள்ளி பட்டியலில் கவுரவமான நிலையை அடைய முயற்சிக்கும். 


இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


 



/p>