ஐபிஎல் பைனலுக்கு தகுதி பெறுவது யார்? மும்பை - புனே இன்று பலப்பரீட்சை
பிளே ஆப்(குவாலிபயர் 1) சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். அதாவது குவாலிபயர் 1-ல் தோல்வியடையும் அணி மே 19-ம் தேதி நடைபெறும் குவாலிபயர் 2-ல் விளையாடும்.
ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி லீக் சுற்றில் 10 வெற்றிகளைக் குவித்து முதலிடம் பிடித்ததால் உற்சாகமாக உள்ளது. உள்ளூரில் விளையாடுவதும் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம், ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் புதிய எழுச்சி கண்டுள்ள புனே அணியும் நேரடியாக பைனலுக்கு முன்னேறும் உறுதியுடன் விளையாடும்.
சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டி, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஐபிஎல் 10-வது சீசனின் 8 அணிகள் கலந்து கொண்டன. அதில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் முதல் இடம் மும்பை இந்தியன்ஸ், 2-வது இடம் பிடித்த ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், 3-வது இடம் பிடித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 4-வது இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா(கேப்டன்), ஜாஸ் பட்லர், பார்த்தீவ் படேல், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம், அம்பாட்டி ராயுடு, சிம்மன்ஸ், ஹெஜ்ரோலியா, கரண் சர்மா, சவுரப் திவாரி, அசெலா குணரத்னே, ஜான்சன், ஹர்பஜன் சிங், மிட்செல் மெக்லீனகன், கெய்ரோன் பொலார்டு, கிருனல் பாண்டியா, டிம் சவுத்தி, மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயஸ் கோபால், சித்தேஷ் லாடு, வினய் குமார், நித்திஷ் ரானா, ஹர்திக் பாண்டியா.
புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், பாபா அபராஜித், மயங்க் அகர்வால், அங்குஷ் பெய்ன்ஸ், மிலிந்த் தாண்டன்.