ஐபிஎல் 2018 தொடரில் விராட் கோஹ்லி அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியடைந்தால், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 7_வது இடத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 7-ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர், களம் இறங்கிய பெங்களூரு பேட்ஸ்மேனர்கள் ஹைதராபாத் பந்து வீச்சை தாக்கு பிடிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் பெங்களூரு அணி இலக்கை எட்ட முடியமால் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 


ஐபிஎல் 2018 தொடரில் விராட் கோஹ்லி அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியடைந்தால், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 7_வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆட்டம் வரும் 12 ஆம் தேதி டெல்லி அணியுடன் மோத உள்ளது. 


விராட் கோஹ்லி தனது உடலை கட்டுகொப்புடன் வைத்துகொள்வதில் மிகவும் கவனமாக இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வப்போது தனது உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், சமீபத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணிக்காக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில ஒரு சோதனையை மேற்கொண்டார். ஜாகுலினியின் சவாலான சோதனைக்கு முன்பு  கிட்டத்தட்ட அனைத்து பெங்களூரு அணி வீரர்கள் தோல்வி அடைந்தனர். அந்த வீடியோக்களை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.