ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிஎஸ்கே: வைரலாகும் எம்.எஸ் தோனியின் பார்க்கிங் ஷாட் வீடியோ


சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. 


ஐ.பி.எல் தொடக்க விழா ஏப்ரல் 6-ந் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


அம்பேத்கர் குறித்து சர்ச்சை ட்விட்: பாண்டியாவின் அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை?


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் நேற்று பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார்கள். இவர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.


அஸ்வினுக்கு பதிலாக ஆட உள்ள சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், "நான் வந்துட்டேன்னு சொல்லு. தமிழின் அன்பு உடன் பிறப்பெல்லாம் எப்புடி இருக்கீங்க மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காது கிழியிற உங்க விசிலுக்கு நடுவுல ஐபில்எல் தொடரில் சென்னைக்காக விளையாட போறத நெனச்சாலே "மெர்சலாகுது". தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!'' என ட்வீட் போட்டு உள்ளார்.


ஷமி மீது சூதாட்ட புகார் - ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார?