CSK-வை எதிர்கொள்ளும் அணி எது? போட்டியில் SRH மற்றும் DC!
IPL 2019 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!
IPL 2019 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!
IPL 2019 தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைப்பெறுகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
முன்னதாக IPL 2019 தொடரின் இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை விட்டு வெளியேறும், வெற்றி பெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குவாளிப்பையர்-2 போட்டியில் விளையாடும்.
இன்றைய போட்டில் டெல்லி அணி தரப்பில் காசிக்கோ ரபாடா முதுகு வலி காரணமாக ஓய்வு பெற்றுள்ளார். IPL 2019 தொடரின் அதிக விக்கெட் பெற்றவர் என்ற பெருமை பெற்ற ரபாடாவின் வெற்றிடம் இன்றைய போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரபாடாவிற்கு பதிலாக ட்ரோன்ட் போல்ட் இன்றைய போட்டில் களம் காணுகின்றார்.
ஐதராபாத் அணியை பொருத்தமட்டில் ஜான்னி பாரிஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் இழப்பை ஈடு செய்யும் விதமாக மார்ட்டின் குப்திடில் மற்றும் விரம்தின் சாஹா களமிறக்கப்படுகின்றனர். அதிரடி நாயகன் யூசப் பதானிற்கு பதிலாக அபிசேக் ஷர்மா களம் காணுகின்றார். மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இன்றைய போட்டியில் இரு அணிகளும் பல புதிய யுக்திகளை சோதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முடிவு யாருக்கு சாதகமாய் அமையும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.