இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், சென்னை அணி மும்பையுடன் பலபரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றி்ல் 8 ஆவது முறையாக சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் 3 முறை இறுதி போட்டியில் மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறையும், சிஎஸ்கே ஒரு முறையும் வென்றுள்ளது. இந்த முறையும் வென்று கோப்பையை தக்க வைத்துக்கொள்ள சென்னை அணி போராடும். அதேவேளையில் முன்னால் சாம்பியன் மும்பை அணி மீண்டும் கோப்பையை வெல்ல முனைப்பில் ஆடக்கூடும். 


 



ஆனால் இந்த 2019 IPL சீசனில் இதுவரை இரு அணிகளும் மூன்று போட்டிகளில் மோதியுள்ளன. அந்த மூன்று போட்டியிலும் மும்பை அணி வென்றுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் மீண்டும் மும்பை அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் மும்பை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சமபலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஆனால் சென்னை அணியில் சில முக்கிய வீரர்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படாமல் இருகின்றனர். 


 



பலம் வாய்ந்த இரு அணிகளான சென்னை மற்றும் மும்பை இறுதிப்போட்டிக்கு நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.