IPL 2019: இன்று ராஜஸ்தான் - பஞ்சாப் மோதல்; அதிரடிக்கு ரெடியாகும் ஸ்மித் & கெயில்
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12 வது சீசன் கடந்த 23 அன்று தொடங்கியது. தற்போது வரை மூன்று ஆட்டங்கள் முடிந்துள்ளது. இன்று நான்காவது ஆட்டம் இரவு நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் கடந்த ஐபிஎல் சீசனில் தான் களம் இறங்கியது. அதேபோல பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் ஓராண்டு தடையை முடிந்தது. இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு தமிழக வீரர் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் கேப்டனாக உள்ளார். அவரது அணியில் தொடக்க வீரர்ரான கிறிஸ் கெயில் மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர். எனவே இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். மேலும் கிறிஸ் கெயில் சிக்சர் மழை பொலிவாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய போட்டி இரவு 8 மணிக்கு ஜெய்பூர் மைதானத்தில் நடைபெறும்.