IPL 2019 தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும், ஐந்தாவது இடத்தில் இருக்கும் மும்பை அணியும் மோதிய ஆட்டம் வாங்ஹேடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள்  கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் இணைந்து மும்பை அணியின் பந்து வீச்சை துவசம் செய்தனர்.விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது பஞ்சாப் அணி. ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு அதிகமாக பஞ்சாப் அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல்* 100(64) ரன்கள் எடுத்து கடைசி வரைக்கும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.


198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 56 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது. பின்னர் வந்த மும்பை கேப்டன்  போலார்டு அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 31 பந்துகளில் 83 ரன்கள் அடித்தார். அதில் 10 சிச்சர் மற்றும் 3 பவுண்டரி அடங்கும்.


20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.


போலார்டு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.