IPL 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!
IPL 2019 தொடரின் 53-வது லீக் ஆட்டம் இன்று டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஷிரியாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஜிங்கியா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதினர். இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ரஹானே 2 ரன், லிவிங்ஸ்டன் 14 ரன், சஞ்சு சாம்சன் 5 ரன், லோம்ரோர் 8 ரன், ஸ்ரேயாஸ் கோபால் 12 ரன், ஸ்டூவர்ட் பின்னி 0 ரன், கெளதம் 6 ரன், சோதி 6 ரன், என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 50 (49) ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா மற்றும் அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட், டிரென்ட் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (121 ரன்கள்) இலக்கை எட்டியது.
இதன்மூலம் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷாப் பான்ட் ஆட்டமிழாக்காமல் 53 (38) ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியில் சோதி 3 விக்கெட் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட் வீழ்த்தினர்.