IPL 2019: டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து வீச்சு தேர்வு
இன்று நடைபெற உள்ள ஏழாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.
19:37 28-03-2019
இன்று நடைபெறும் மும்பை மற்றும் பெங்களுரு ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
ஐபிஎல் தொடரின் 12வது சீசன் கடந்த 23 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் 6-வது லீக் ஆட்டம் நேற்று முடிந்தது. இன்று ஏழாவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.
இன்று நடைபெற உள்ள ஏழாவது டி-20 லீக் ஆட்டம் பெங்களூரில் உள்ள எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணியளவில் ஆரம்பமாகும். பெங்களூர் - மும்பை இரு அணிகளும் டி-20 லீக்கில் (ஐபிஎல் 2019) முதல் போட்டியில் வெற்றியை இழந்துள்ளன. இதனால் இந்த இரு அணிகளும் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் தனது முதல் போட்டியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ரோஹித் ஷர்மாவின் மும்பை அணி முதல் போட்டியில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயத்தால் ஆடவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் மூத்த வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அணிக்கு திரும்பியுள்ளார் என்பது மும்பை அணிக்கு பலம் ஆகும்.
அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிடம் தனது முதல் போட்டியை இழந்தது. ஆனால் இன்றைய போட்டி சொந்த மாநிலத்தில் நடைபெற உள்ளதால் விராட் கோலியின் பெங்களூரு அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இது அவர்களுக்கு சூழ்நிலைகள் மற்றும் உள்நாட்டு ஆதரவை அளிப்பதாக இருக்கும்.
இரண்டு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்ய இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் நிலையில், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோஹ்லி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், பார்த்திவ் படேல், சிம்ரன் ஹெட்மேயர், மோயின் அலி, கொலின் டி கிராண்ட்ஹோம், ஷிம்ம் துபே, உமேஷ் யாதவ், யூசுந்தர சஹால், முகமது சிராஜ், நவடிப் சைனி.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா(கேப்டன்), யுவராஜ் சிங், கியோன் பொலார்ட், சூர்ய குமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா, குணால் பாண்டியா, மைக்கேல் மெக்லென்ஹன், லசித் மலிங்கா, மாயன்க் மார்கண்டே, ரஷிக் சலாம், க்வின்டன் டீக்காக்.