IPL 2020 SRH vs KXIP: இன்றைய இந்தியன் பிரீமியர் லீக் 2020 (Indian Premier League) தொடரின் 22 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் 6 வெற்றி புள்ளிகளி பெற்று, அட்டவனையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதுவரை ஆறு போட்டிகளில் பங்கேற்று 3 தோல்வி மற்றும் 3 வெற்றிகளை பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அதன் பிறகு வெற்றி பெற 202 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய பஞ்சாப் அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் 69 ரன்கள் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.


முன்னதாக டாஸ் வென்ற டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒன்று மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 3 மாற்றங்களுடன் களம் இறங்கியது. ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 40 பந்துகளில் 52 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 55 பந்துகளில் 97 ரன்களும் எடுத்தனர். கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 20 ரன்களும், அபிஷேக் சர்மா 12 ரன்களும் எடுத்தனர். பஞ்சாபைப் பொறுத்தவரை, ரவி பிஷ்னாய் 29 விக்கெட்டுக்கு 3 ரன்களும், அர்ஷ்தீப் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஒரு விக்கெட்டை முகமது ஷமி எடுத்தார்.


ALSO READ |  IPL 2020 SRH vs KXIP: KXIP அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH 201 ரன்கள் குவித்துள்ளது


202 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கு நிக்கோலஸ் பூரன் மட்டும் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதில் மூன்று பேர் ரன் எதுவும் எடுக்காமல் டாக்-அவுட் ஆனார்கள். ஹைதராபாத் அணியை பொறுத்த வரை ரஷீத் கான் மூன்று விக்கெட்டும், கே கலீல் அகமது, டி நடராஜன் தலா இரண்டு விக்கெட்டும், அபிஷேக் சர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR