தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத்.. 15 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020 IPL தொடரின் 11-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியல் 163 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. உலகின் சிறந்த T20 ஸ்பின்னரான ரஷித் கான் தன் பந்துவீச்சால் டெல்லி அணியை வீழ்த்தினார்.


டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.


ALSO READ | IPL 2020: சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்திய RCB.. வெற்றி குறித்து கோலி கூறியது என்ன?


அதன்பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம், ஷிகர் தவனும் ஒரு நாள் போட்டிகள் போல நிதானமாக ரன்களைச் சேர்த்தார். அவர், 34 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷப் பன்ட் 28 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணியை தோல்வியைத் தழுவியது. அதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. ஹைதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


IPL 2020 Points Table


TEAM MATCH WON LOST TIED NR PTS NRR
RR 2 2 0 0 0 4 +0.615
DC 3 2 1 0 0 4 +0.483
RCB 3 2 1 0 0 4 -1.450
KXIP 3 1 2 0 0 2 +1.498
MI 3 1 2 0 0 2 +0.654
SRH 3 1 2 0 0 2 -0.228
KKR 2 1 1 0 0 2 -0.767
CSK 3 1 2 0 0 2 -0.840