புதுடெல்லி: ஐபிஎல் (IPL 2020இன் 13 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸின் (CSKமுதல் போட்டி வெற்றி பெற்றதால், இப்போது முழு அணியும் தோல்வியாகவே காணப்படுகிறது. முதல் போட்டியில் மும்பையை (MI) தோற்கடித்த பிறகு, இப்போது தோனியின் சிஎஸ்கே (MS Dhoni) தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை எதிர்கொண்டார். ஐ.பி.எல்லில் மிகவும் விரும்பப்பட்ட அணிகளில் ஒன்றான சென்னைக்கு இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அணியின் மிக வெற்றிகரமான பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா திரும்புவது குறித்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். #comebackRaina என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது, மேலும் அவர் திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்கள் கடுமையாக கோருகின்றனர்.


 


ALSO READ | IPL 2020: சின்ன தல Suresh Raina திரும்ப வராரா இல்லையா? என்னதான் சொல்றாங்க CSK?


 



 


 



 


 



 


இது தொடர்பாக CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் சனிக்கிழமை (செப்டம்பர் 26) சுரேஷ் ரெய்னா CSK அணிக்கு திரும்ப மாட்டார் என்றும், ஆனால் CSK ரசிகர்கள் விரைவில் மகிழ்வதற்கான தருணங்கள் வரவிருக்கின்றன என்றும் கூறினார்.


"சுரேஷ் ரெய்னா (Suresh Raina) தன்னை மற்ற பல விஷயங்களில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால், நாம் அவரை எதிர்பார்க்க முடியாது. அவருடைய முடிவையும் அவரது தனிப்பட்ட கருத்துகளையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் அதைப் பற்றி தற்போது சிந்திக்கவில்லை" என்று விஸ்வநாதன் ANI இடம் கூறினார்.


"CSK அணி வலுவாக ஆட்டத்தில் திரும்பும் என்று ரசிகர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இது ஒரு விளையாட்டு. இதில் சில நாட்கள் நமக்கு சாதகமாக இருக்கும், சில நாட்கள் அப்படி இருக்காது. ஆனால் வீரர்களுக்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நன்றாகத் தெரியும். ஆகையால், ரசிகர்களின் புன்னகை மீண்டும் திரும்பும்” என்று அவர் மேலும் கூறினார்.


 


ALSO READ | CSKவின் மோசமான ஆட்டத்திற்கு டிவிட்டரில் கிழிக்கும் ரசிகர்கள்


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR