IPL 2021 auction: இந்தியன் பிரீமியர் லீக்கில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிகவும் வலுவான அணிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெற்ற ஐபிஎல் 2020 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த அணி தனது வீரர்களில் பெரும்பாலானவர்களை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்திருந்தது.


SRH IPL 2021 player list 2021: டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மினி ஏலத்தில் பங்கு பெறும். அதில் ஒரு வெளிநாட்டு வீரர்  உட்பட மூன்று வீரர்களை சன்ரைசர்ஸ் அணி வாங்கலாம். 


Also Read | IPL சரித்திரத்திலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட Chris Morris சாதனை 


சன்ரைசர்ஸ் அணி தக்க வைத்துக் கொண்ட வீரர்கள்:  அணியின் கேப்டன் டேவிட் வார்னர், அபிஷேக் சர்மா, பசில் தம்பி (Basil Thampi), புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சித்தல்த் அஹ்மத் விஜய் சங்கர், விருத்திமான் சாஹா, அப்துல் சமத், மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh), ஜேசன் ஹோல்டர் (Jason Holder), பிரியம் கார்க் (Priyam Garg), விராட் சிங்


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சய் யாதவ், பி சந்தீப், பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் ஆலன், யர்ரா பிருத்விராஜ் (Yarra Prithviraj)


Also Read | IPL Auction 2021: துவங்கியது IPL ஏலம், ஏலம் விடப்பட்ட முதல் வீரர் யார்? 


இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 125 பேர் வெளிநாட்டினர். மூன்று பேர் இணை வீரர்கள். எட்டு அணியின் உரிமையாளர்களால் அதிகபட்சம் 61 வீரர்களை ஏலம் எடுக்க முடியும். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR