IPL 2021, CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இந்த IPL பதிப்பில் தனது நான்காவது போட்டியை ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாகும். டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். பேட் கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரில் டு பிளெஸ்ஸி 1 பவுண்டரி, ருதுராஜ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தனர். 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்ஸியும் (Faf du Plessis) அரைசதத்தை எட்டும் நேரத்தில் வருணிடம் விக்கெட்டை இழந்தார் ருதுராஜ். 42 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். அதே ஓவரில் பவுண்டரி அடித்த டு பிளெஸ்ஸி 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். சிறப்பாக விளையாடி வந்த சென்னை அணி 16-வது ஓவரிலேயே சென்னை அணி 150 ரன்களைக் கடந்தது.


நரைன் வீசிய 17-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் அடித்த மொயீன் அலி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். பின்னர் டு பிளெஸ்ஸியுடன் கேப்டன் மகேந்திர சிங் தோனி இணைந்தார். 19-வது ஓவரில் டு பிளெஸ்ஸி 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 200 ரன்களைத் தொட்டது. அதே ஓவரின் கடைசி பந்தில் தோனி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


ALSO READ: IPL 2021: 'ஜடேஜாவின் லெவலுக்கு பந்து அவர தேடி வரும்', வைரல் ஆன தோனியின் 8 ஆண்டு பழைய ட்வீட்


இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டு பிளெஸ்ஸி 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.


சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளின் விவரம் இதோ:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:


எம்.எஸ். தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சேதேஸ்வர் புஜாரா, கர்ன் சர்மா, இம்ரான் தாஹிர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், கிருஷ்ணப்ப கவுதம், மிட்செல் சாண்ட்னர், ரவிஸ்ரினிவாசன் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கே.எம்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: எயோன் மோர்கன் (கேப்டன்), நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, எயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், வருண் சக்ரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா, சுனில் ஃபெரின் 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 


செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR