IPL 2021 KKR VS RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் 2021 போட்டித்தொடரின் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2021 போட்டித்தொடரின் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக பேட்டிங் செய்ய களம் இறங்கிய கொல்கத்தா அணி 171 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணியின் வீரர்கள் மெதுவாகத் தொடங்கினாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஷிவம் மாவி (Shivam Mavi) அடித்த டிரிபிள் ஸ்ட்ரைக்ஸ் அருமையாக இருந்த்து. ஐபிஎல் 2021 இன் 54 வது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.
அடுத்து மட்டை வீச களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 85 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றுப்போனது.
20 ஓவர் போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கு கடினமானது தான். பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படியும் ராஜஸ்தான் ராயல்ஸ் இல்லை. இருந்தாலும் போட்டி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸின் வீரர்கள் தொடர்ந்து அவுட்டாகும்போதே போட்டியின் சுவாரசியம் குறைந்துவிட்டது.
ராகுல் டிவேடியா, சிறந்த ஸ்ட்ரைக்கர் என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. 4 விக்கெட்டுகள் எடுத்து 21 ரன்களையும் பெற்ற ஷிவம் மாவியும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையைப் பெற்றார்.
ராகு டிவேடியா சிக்ஸர்களை அருமையாக அடித்ததற்காக ஒரு லட்ச ரூபாய் பரிசு பெற்றார். பவர் ப்ளே ஆஃப் பரிசை லாக்கி ஃபெர்குசன் பெற்றார். அவர் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதற்கும் ஒரு லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது.
முன்னதாக, இன்று ஐபிஎல்லின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் 53வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையில் நடைபெற்றது. 136 என்ற வெற்றி இலக்கை பஞ்சாப் அணி 13 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது.
இந்தப் போட்டியின் அம்பயர்களாக, இங்கிலாந்தின் மைக்கேல் காஃப் மற்றும் இந்தியாவின் சையத் காலித் மற்றும் உல்ஹாஸ் காந்தே செயல்பட்டனர். மூன்றாவது அம்பயராக இந்தியாவின் யஷ்வந்த் பர்தே இருந்தார். போட்டியின் நடுவராக இந்தியாவின் மனு நய்யார் இருந்தார்.
Also Read | IPL 2021 RCB vs SRH: சன்ரைசர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR