வெள்ளிக்கிழமை தொடங்கும் ஐபிஎல்? வெளியான முக்கிய தகவல்
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர், செப்டம்பர் மாதம் தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
பிசிசிஐ சார்பில் மே.29 அன்று நடந்த SGM மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளும் நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.
இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 (IPL 2021) சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ (BCCI) நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (AGM) இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | இந்தியாவுக்கு 2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு
இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அமீரகம் சென்றிருக்கிறார். மீதமுள்ள போட்டிகளை எந்தவித சிக்கலுமின்றி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவர் அமீரகம் சென்றுள்ளார். மேலும் ஐபிஎல் 2021 தொடரை செப்டம்பர் 17ம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 18 அல்லது செப்டம்பர் 19ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 17 அதாவது வெள்ளிக்கிழமை தொடரை தொடங்குவது என்று BCCI முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 10ம் தேதி பைனல் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கரீபியன் பிரீமியர் லீக் (CPL) அமீரகத்தில் ஆகஸ்ட் 28 தொடங்கி, செப்டம்பர் 19 வரை நடைபெறுவதாய் அட்டவணை முடிவு செய்யப்பட்டது. இப்போது, பிசிசிஐ செப்டம்பர் 17ம் தேதியே தொடங்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பதால், கரீபியன் தொடரை 7 நாட்கள் முன்னதாகவே முடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR