IPL 2021: டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்டே தொடர்வார்
ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலும் டெல்லி கேபிடல் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
IPL 2021 ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலும் டெல்லி கேபிடல் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். அதன் காரணமாக ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். தற்போது காயத்திலிருந்து மீண்டு அணியில் சேர்ந்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். இருப்பினும் மீதமுள்ள போட்டிகளில் ரிஷப் பண்ட் கேப்டனாக தொடர்வார் என்று அறிவித்துள்ளது.
ரிஷப் பண்ட் தலைமையில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதன் காரணமாகவே ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் முழுவதும் ரிஷப் பண்ட் கேப்டனாக தொடரலாம் என்று அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. சிறிது தினங்களுக்கு முன் டெல்லி கேப்பிடல் அணி ஐக்கிய அமீரகம் புறப்பட்டது, தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
காயத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாட உள்ளேன். தற்போது கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது, எனது கரியரில் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும்போது காயம் காரணமாக படுக்கையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறினார். ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஆடிய டெல்லி கேப்பிடல் அணி 2019ஆம் ஆண்டு 7 வருடங்களுக்குப் பிறகு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கடந்த வருடம் நடந்த ஐபிஎல் போட்டியில் பைனல் வரை சென்று தோல்வியை தழுவியது.
ALSO READ 4வது டெஸ்டில் களமிறங்கும் கிறிஸ் வோக்ஸ்! இந்திய அணிக்கு பின்னடைவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR