தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா : தொடருமா IPL?
தமிழக கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்-லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உறுப்பினருமான டி நடராஜனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
IPL 2021: ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. தமிழக கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்-லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உறுப்பினருமான டி நடராஜனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடராஜன் தன்னை தற்போது தனிமைபப்டுத்திக் கொண்டுள்ளார்.
நடராஜனுக்கு (T Natarajan) கோவிட் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ குழு நடராஜனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஆறு நபர்களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்:
1. விஜய் சங்கர் - வீரர்
2. விஜய் குமார் - அணி மேலாளர்
3. ஷ்யாம் சுந்தர் ஜே - பிசியோதெரபிஸ்ட்
4. அஞ்சனா வண்ணன் - மருத்துவர்
5. துஷார் கேட்கர் - தளவாட மேலாளர்
6. பெரியசாமி கணேசன் - நெட் பவுலர்
ALSO READ: விறுவிறுப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் Rajasthan Royals வெற்றி
நடராஜனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் உட்பட குழுவில் உள்ள மீதமுள்ள அனைவரும் இன்று காலை உள்ளூர் நேரப்படி 5 மணிக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான இன்றைய ஆட்டம் துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் எந்த தடையும் இல்லாமல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL-ன் 14 வது சீசன் ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் துவங்கியது. முன்னதாக, IPL 2021-ன் முதல் பகுதி, பல வீரர்களும், பல்வேறு அணிகளின் உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ALSO READ: RCB-க்கு பிறகு இந்த IPL அணியில் சேரவுள்ளாரா விராட் கோலி? Dale Steyn கூறியது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR