IPL 2021: ஆர்சிபி அணிக்காக ஆடபோகும் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர்!
சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் இன்றுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு வருடமும் அரையிறுதிக்கு செல்வதற்கு இந்த அணி தடுமாறி வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் ஆர்சிபி அணி தனது பிளேயர்களை நிறைய மாற்றியது. ஆனால் ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறும் வீரர்கள் அனைவரும் மற்ற அணிக்கு சென்றவுடன் சிறப்பாக ஆடி தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவர்.
2021 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்சிபி அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது 7 போட்டிகளில் விளையாடி நிலையில் அதில் 5 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தனது புதிய வீரரை இன்று அறிவித்துள்ளது ஆர்சிபி நிர்வாகம். சிங்கப்பூரை சேர்ந்த 25 வயதே ஆன டிம் டேவிட் என்ற இளம் வீரர் இந்த வருடம் நடக்க உள்ள மீதமுள்ள போட்டிகளில் எங்கள் அணிக்கு விளையாடுவார் என்று அறிவித்துள்ளது. ஃபின் ஆலன் என்ற நியூசிலாந்து வீரருக்கு பதிலாக டிம் டேவிட் விளையாட இருக்கிறார்.
வலதுகை ஆட்டக்காரரான டிம் டேவிட் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். படிகல், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஹசரங்க, சுந்தர், ஜேமிசன், சிராஜ், சாஹால் என சமீபத்தில் நன்றாக விளையாடி வரும் அனைத்து வீரர்களும் ஆர்சிபி அணியில் இருப்பதால் இந்த வருடம் கோப்பையை கைப்பற்வோம் என ஆர்சிபி அணி ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe