IPL 2021: Mega Auction-ல் CSK தங்கள் அணியிலிருந்து வெளியேற்றப்போகும் வீரர்கள் யார் தெரியுமா
CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், கேப்டன் எம்.எஸ்.தோனி தொடர்ந்து அணிக்கு தலைமை வகிப்பார் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டின் IPL (IPL 2020) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைப் பொறுத்தவரை ஒரு மோசமான சீசனாக இருந்தது. பிளேஆஃப்பிலிருந்து வெளியேறிய முதல் அணியாக இருந்தது CSK.
இந்த நிலையில், வீரர்களுக்கான அடுத்த மெகா ஏலத்திற்கு முன்னர், CSK சில மாற்றங்களை செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மெகா ஏலம் இந்த ஆண்டு டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து திட்டங்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தவிடுபொடியானதால், இனி இந்த ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறும் என தெரிகிறது.
தங்கள் அணிக்கு தேவை இல்லை என எண்ணும் வீரர்களை ஃப்ரான்சைசுகள் ஏலங்களின் போது தங்களுடனான ஒப்பந்தத்திலிருந்து ரிலீஸ் செய்வது வழக்கம். அப்படி CSK-வும் அடுத்த ஏலத்தில் பல வீரர்களை அணியிலிருந்து அனுப்பக்கூடும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
CSK ரிலீஸ் செய்யக்கூடிய வீரர்கள் யார்?
சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) தொடர்ந்து அணிக்கு தலைமை வகிப்பார் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அடுத்தது, யார் அணியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி வருகிறது. குறைந்த பட்சம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நல்ல முனைப்புடன் விளையாடக்கூடிய ஒரு இளம் குழுவை CSK விரும்புகிறது. CSK, இந்தியன் பிரீமியர் லீக்கின் 14 வது சீசனுக்கு முன்னதாக வெளியேற்றக்கூடிய வீரர்களின் பட்டியல் இங்கே.
டுவைன் பிராவோ: பல ஆண்டுகளாக அணியின் மிகவும் விசுவாசமான வீரர்களில் ஒருவராக இருந்த Dwayne Bravo, 2011 முதல் அணியின் ஒரு அங்கமாகவும், கடந்த காலங்களில் மறக்கமுடியாத CSK வெற்றிகளின் வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார். இப்போது இவருடைய மற்ற பணிகள் காரணமாக இவரால் ஆட்டத்தில் அதிகம் கவனம் செலுத்த முடிவதில்லை என்ற கருத்து உள்ளது.
ALSO READ: கர்ப்பிணி மனைவியின் காலணியை சுத்தம் செய்யும் கிரிக்கெட் வீரர் Virat Kohli
சுரேஷ் ரெய்னா: இவரை அனுப்புவது அணிக்கு பெரும் வருத்தத்தை அளிக்கும். சுரேஷ் ரெய்னா தொடக்கத்திலிருந்தே அணியின் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறார். இவர் IPL வரலாற்றில் மிகவும் உறுதியான மற்றும் நம்பகமான வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த ஆண்டு போட்டிகளின் போது தனிப்பட்ட காரணங்களால் இவராமல் போட்டிகளில் ஆட முடியாமல் போனது. வேறு சில கருத்து வேறுபாடுகள் பற்றியும் பேசப்பட்டன. இவரையும் CSK அணி ரிலீஸ் செய்யலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹர்பஜன் சிங்: IPL வரலாற்றில் மற்றொரு முக்கிய வீரரும் வெற்றிகரமான பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களால் IPL 2020-யிலிருந்து விலகிக்கொண்டார். இவருக்கும் வயது அதிகமாகிக்கொண்டிருப்பதாலும், இளம் அணிக்கான ஏற்பாடுகளை அணி செய்து கொண்டிருப்பதாலும், இவரும் வெளியேற்றப்படக்கூடும்.
ஷேன் வாட்சன்: IPL-2020-யில் CSK-வின் கடைசி ஆட்டத்திற்குப் பிறகு, வாட்சன் (Shane Watson) அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆகையால் இதில் IPL-லும் அடங்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இம்ரான் தாஹிர்: மற்ற சீசன்களைப் போலல்லாமல், IPL-202—ல், இம்ரான் தாஹிர் CSK-வின் பெரும்பாலான ஆட்டங்களில் இடம்பெறவில்லை. இவருக்கு மாற்றாக இந்தியன் லெக் ஸ்பின்னர் பியுஷ் சாவ்லாவே பல போட்டிகளில் ஆடினார். இவருக்கும் வயது அதிகமாவதால், இவரும் CSK –விலிருந்து ரிலீஸ் செய்யப்படலாம்.
ALSO READ: IPL 2020: மும்பை இந்தியன்ஸ் 5வது முறையாக IPL Champions பட்டத்தை கைபற்றியது!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR