RCB-க்கு பிறகு இந்த IPL அணியில் சேரவுள்ளாரா விராட் கோலி? Dale Steyn கூறியது என்ன?
விராட் கோலி குறித்த பல ஊகங்கள் கிளம்பியுள்ளன. அவர் IPL-ன் அடுத்த சீசனில் RCB-ஐ விட்டுவிட்டு ஒரு புதிய அணியில் விளையாடக்கூடும் என்று பலர் கூறி வருகின்றனர்.
IPL 2021: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு ஆர்சிபி-யின் கேப்டன் பதவியில் இருந்து விலக கோலி சமீபத்தில் முடிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து விராட் கோலி (Virat Kohli) குறித்த பல ஊகங்கள் கிளம்பியுள்ளன. அவர் IPL-ன் அடுத்த சீசனில் RCB-ஐ விட்டுவிட்டு ஒரு புதிய அணியில் விளையாடக்கூடும் என்று பலர் கூறி வருகின்றனர்.
RCB-க்கு பிறகு இந்த அணிக்காக விளையாட உள்ளாரா கோலி?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக IPL-ல் விளையாடிய தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன், ஆர்சிபி அணியை விட்டு வெளியேறினால், கோலி ஒரு குறிப்பிட்ட அணியுடம் இணைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறியுள்ளார். IPL அணிகளில் ஒரு குறிப்பிட்ட அணி கோலியை தங்கள் அணியுடன் இணைத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டக்கூடும் என டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்ட அணி டெல்லி கேப்பிடல்ஸ் அனியாகும். ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போவிடம் பேசிய டேல் ஸ்டெய்ன், 'நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கதான் விரும்புவீர்கள். நாம் கிறிஸ் கெய்ல் அணியை விட்டு வெளியேறுவதையும் பார்த்தோம்.’ என்று கூறினார்.
ALSO READ: கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி; RCB ரசிகர்கள் அதிர்ச்சி
கோலி பற்றிய கணிப்புகள்
டேல் ஸ்டெய்ன், 'டேவிட் பெக்காம் மான்செஸ்டரை விட்டு வெளியேறியதையும் நாம் பார்த்தோம். இந்த அனைத்து பெரிய வீரர்களும் தங்கள் கிளப்பிற்காக நீண்ட நேரம் விளையாடிவிட்டு வெளியேறினர். விராட் கோலி டெல்லியைச் சேர்ந்தவர். அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சேர்வது இயல்பான ஒரு விஷயம். தங்கள் அணியில் சேரும்படி டெல்லி அணியும் அவரை கேட்கலாம்’ என்று மேலும் தெரிவித்தார்.
கடைசி ஐ.பி.எல் போட்டி வரை பெங்களூரு அணிதான்
எனினும், அடுத்த பதிப்பில், RCB அணியின் கேப்டன் பதவியிலிருந்துதான் தான் விலகவுள்ளதாகவும், தனது கடைசி ஐ.பி.எல் போட்டி வரை தான் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாட உள்ளதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது குறித்து கோலி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார்.
கோலி IPL-ல் 6000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் விராட் கோலி 6000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் 2013 முதல் இன்று வரை கோலி அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். திங்களன்று கேகேஆருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. அணி, 19 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதன் பின்னர் ஆடிய கே.கே.ஆர் அணியின் இரண்டு இளம் பேட்ஸ்மேன்களான சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 10 ஓவர்களில் அணி இலக்கை அடைந்தது.
ALSO READ: IPL 2021: வருணின் சுழலில் சுருண்ட ஆர்சிபி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR