பஞ்சாப் அணியின் கேப்டன் இவர்தான் - அறிவிப்பு விரைவில்
பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்துள்ள அணி நிர்வாகம், அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுல், தன்னை அந்த அணியில் இருந்து விடுவித்துக் கொண்டார். மேலும், புதியதாக களமிறங்க உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பஞ்சாப் அணி தள்ளப்பட்டது.
மேலும் படிக்க | இந்தியா vs இலங்கை; முதல் T20-ல் இன்று மோதல் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
தற்போது அந்த அணி மயங்க் அகர்வாலை புதிய கேப்டனை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் பிளேயர் ரீட்டெயின் லிஸ்டில் பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் 12 கோடி ரூபாய்க்கும், அர்ஷ்தீப் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் ரீட்டெய்ன் செய்தது. இரண்டு வீர ர்களை மட்டுமே ரீட்டெய்ன் செய்ததால் அதிக தொகையுடன் ஏலத்தில் பங்கேற்ற அந்த அணி, ஷிகர் தவான், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோவ், ராகுல் சாஹர், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஷாருக் கான் போன்ற சில முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி உள்ளது. ஐபிஎல் தொடங்கியது முதல் மிக மோசமான அணிகளில் ஒன்றாக பஞ்சாப் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 2014-ல் ஒருமுறை மட்டுமே இறுதிப் போட்டியை அந்த அணி எட்டியது. அப்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோற்று, ஐபிஎல் டைட்டிலை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதன்பின்னர் ஒருமுறை கூட பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
மேலும் படிக்க | 14 கோடி போச்சா? சிஎஸ்கே அணியில் சாஹர் விளையாடுவது சந்தேகம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR