IPL 2024 Players Auction: எந்தெந்த பிளேயருக்கு எவ்வளவு விலை..! - முழு விவரம்
IPL 2024 Players price: ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கும் நிலையில் ஏலத்தில் பங்கேற்க கூடிய பிளேயர்களின் அடிப்படை விலை தெரியவந்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 50 லட்சம் ரூபாய், ஷர்துல் மற்றும் உமேஷ் ஆகியோர் 2 கோடி ரூபாய் லிஸ்டில் வருகிறார்கள்.
வீரர்களுக்கான ஐபிஎல் ஏலம் 2024
ஐபிஎல் 2024 ஏலம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த ஏலத்தில் பங்கேற்க கூடிய ஸ்டார் பிளேயர்களின் அடிப்படை விலையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளார். உலக கோப்பையை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த 7 வீரர்கள் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர்.
2 கோடி ரூபாய் யாருக்கு?
ஐபிஎல் 2024 ஏலத்தில் அடிப்படை விலை 2 கோடி ரூபாய் என 23 வீரர்கள் நிர்ணயித்துள்ளனர். இதில் உலக கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், ஜோஷ் இங்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஷான் அபோட் ஆகியோர் இந்த ஸ்லாட்டில் உள்ளனர். இவர்களுடன் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல வீரர்கள் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க | ரிங்கு சிங்: இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங்கா? - கவாஸ்கர்
மேலும், ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் வங்கதேசத்தின் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரும் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் பங்கேற்க உள்ளனர். ஆப்கானிஸ்தானின் முகமது நபி 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை.
இந்திய வீரர்களுக்கான விலை
ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இந்திய வீரர்கள் 2 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்வார்கள். 13 வீரர்கள் 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் பங்கேற்கின்றனர். 333 வீரர்களில் 214 இந்தியர்களும் 119 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இதில் இரண்டு வீரர்கள் இணைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக 77 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த அணியில் எவ்வளவு காலியிடம்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 6 இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
ஐபிஎல் அணிகளின் இருப்பு தொகை
IPL 2024 ஏலத்திற்கு முன்னதாக அதிக தொகை வைத்திருக்கும் அணியாக குஜராத் டைட்டன்ஸ் உள்ளது. அவர்களிடம் ₹38.15 கோடி மீதமுள்ளது. அதைத் தொடர்ந்து SRH (₹34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (₹32.7 கோடி) மற்றும் CSK (₹31.4 கோடி) ஆகிய அணிகள் உள்ளன.
ஐபிஎல் ஏலம் தொடங்கும் நேரம்
IPL 2024 ஏலம் டிசம்பர் 19 அன்று துபாய் நேரப்படி மதியம் 1 மணிக்கு, இந்திய நேரப்படி மாலை 2.30 மணிக்கு தொடங்கும்.
மேலும் படிக்க | Gautam Gambhir: உலக கோப்பையை வெல்ல கேப்டன் எல்லாம் முக்கியமில்லை - கம்பீர் அட்வைஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ