ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்... எந்தெந்த அணிக்கு எவ்வளவு சதவீதம் வாய்ப்பு?
IPL 2024 Play Off Qualification: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிக்கும் இன்னும் எவ்வளவு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
IPL 2024 Team Wise Percentage Play Off Qualification Chances: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் 17வது சீசன் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. 10 அணிகள் மோதிய லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளே அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதலிரண்டு இடங்களுக்கு சண்டைப் போட்டு வருகிறது என்றால் அடுத்த இரண்டு இடங்களுக்கு மூன்று, நான்கு அணிகள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன. பல அணிகளுக்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் கிரிக்கெட்டில் அதுவும் டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருப்பதால் 10 அணிகளின் பிளே ஆப் சுற்று வாய்ப்புகளையும் சதவீத அடிப்படையில் இங்கு காணலாம்.
ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா
இரு அணிகளும் டாப் 2 இடத்தை பிடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதாவது, ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை முதலிடத்தை பிடிக்க 62.5% வாய்ப்புள்ளது. அதேதான் கொல்கத்தா அணிக்கும். இவர்களின் யாராவது ஒருவர் 3வது இடத்திற்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அஅணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருந்தாலும் அதன் தற்போது 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தாலும், அந்த அணி பிளே ஆப் வர வாய்ப்பே (0%) இல்லை. அதிக ரன்ரேட்டில் அடுத்த இரண்டு போட்டிகளை வென்றாலும் அதிகபட்சமாக 5வது இடத்தைதான் பிடிக்கும்.
மேலும் படிக்க | சேப்பாக்கத்தில் பிரியாவிடை? மே 12ம் தேதியுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி?
பஞ்சாப் கிங்ஸ்
கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடி வந்தாலும், தரம்சாலாவில் சிஎஸ்கே அணிக்கு எதிரான படுதோல்வி இவர்களின் பிளே ஆப் கனவை படுகுழியில் தள்ளிவிட்டது எனலாம். அந்த வகையில், இவர்கள் பிளே ஆப் வர இன்னும் 6% வாய்ப்பே இருக்கிறது. இன்று நடக்கும் ஆர்சிபி உடனான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்தே வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ்
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணி குஜராத். இருப்பினும் அந்த அணிக்கு இன்னும் பிளே ஆப் செல்ல 8% வாய்ப்பே இருக்கிறது. நாளை நடைபெறும் சிஎஸ்கே உடனான போட்டி அவர்களுக்கு மிக முக்கியமானதாகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
7வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல 8% வாய்ப்புதான் இருக்கிறது. இன்னும் மூன்று போட்டிகளில் பெரிய நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வென்று மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை வைத்துதான் பெங்களூரு அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இயலும். குறிப்பாக, இன்றைய பஞ்சாப் போட்டியில் தோற்றால் அப்படியே வெளியேற வேண்டியதுதான்.
லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய படுதோல்வி இந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பை மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளிவிட்டது. தொடரின் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய லக்னோ அணி தற்போது 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய போட்டிக்கு முன் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு 70% இருந்த நிலையில், அது தற்போது 20% ஆக குறைந்துவிட்டது.
மேலும் படிக்க | SRH வெற்றி-கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய LSG அணியின் உரிமையாளர்! வைரல் வீடியோ..
டெல்லி கேப்பிடல்ஸ்
தொடரின் தொடக்கத்தில் மிக மோசமான நிலையில் இருந்த டெல்லி அணி இரண்டாம் பாதியில் அசூர வளர்ச்சியை பெற்றிருக்கிறது. டெல்லி அணி 12 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று 5வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் டெல்லி அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பு 50% தான்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் அவர்களின் பிளே ஆப் வாய்ப்பு 72 சதவீதத்தில் இருந்து 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது ரன்ரேட் அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
மிகவும் கூலாக இருக்கும் அணியென்றால் அது சிஎஸ்கே தான். இருப்பினும் அந்த அணிக்கும் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு 73 சதவீதமே உள்ளது. அடுத்த 3 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்றாலே போதும் என்றாலும் மூன்றையும் வெல்வதே பாதுகாப்பானதாக இருக்கும்.
மேலும் படிக்க | என்னப்பா! இப்படி சொல்லிட்டாரு.. ரோஹித் சர்மா குறித்து யுவராஜ் சிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ