IPL 2024: ஐபிஎல்லில் இன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகள்! முழு விவரம்!
IPL 2024 Today Match: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் இன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்றன.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வெற்றிகரமாக மார்ச் 22 முதல் தொடங்கி உள்ளன. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்று ஐபிஎல்லில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்றைய தினத்தின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டி மதியம் 3.30 மணிக்கு சண்டிகரிலும், இரண்டாவது போட்டி மாலை 7.30 மணிக்கு கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | "நீ சிங்கம் தான்..." சிஎஸ்கே கேப்டனாக தோனியின் செயல்பாடுகள்...!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்
ஐபிஎல் 2024ன் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் சண்டிகரில் உள்ள புத்தம் புதிய மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் முதன்முறையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. பஞ்சாப் அணியை ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார். அதே நேரத்தில் டெல்லி அணிக்கு இந்த ஆண்டு ரிஷப் பந்த் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 2022ல் நடந்த கார் விபத்திற்கு பிறகு முதல் முறையாக கிரிக்கெட் விளையாட உள்ளார். இந்த இரு அணிகளாலும் கடந்த ஆண்டு பிளேஆஃப்களுக்குச் செல்லவில்லை.
டெல்லி அணியில் பேட்டிங் பலமாக உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் இந்த ஆண்டு ஒரு பிளேயராக விளையாட உள்ளார். சமீபத்திய போட்டிகளில் வார்னர் சிறந்த ஃபார்மில் இல்லாவிட்டாலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சமீபத்தில் இந்தியாவிற்காக சிறப்பாக பந்து வீசி வரும் குல்தீப் யாதவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற கடும் முயற்சி செய்து வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. கேகேஆர் அணி கடந்த ஆண்டு ஏழாவது இடத்தைப் பிடித்து இருந்தது. மேலும் SRH அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதுவரை இந்த இரு அணிகளும் ஒட்டுமொத்தமாக 25 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதே சமயம் ஹைதராபாத் அணி பாட் கம்மின்சை 20 கோடிக்கு எடுத்துள்ளது, சீசனுக்கு முன்னதாக அவரை கேப்டனாகவும் அறிவித்துள்ளனர். அதே சமயம் இந்த ஆண்டு கெளதம் கம்பீர் கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார். கேகேஆர் அணி ஐபிஎல் 2018ல் பிளேஆஃப்களுக்கும், ஐபிஎல் 2021ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணியில் இணைந்து இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ