ஐபிஎல் 2025 மெகா ஏலம்: இன்று எத்தனை மணிக்கு தொடங்கும்...? நேரலையை எங்கு பார்ப்பது...?
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்று எத்தனை மணிக்கு தொடங்கும், எங்கு நேரலையில் பார்ப்பது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction Today Timings And Live Telecast: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பெரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாள் வந்துவிட்டது. ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் இன்று (நவ. 24) தொடங்குகிறது. சௌதி அரேபியாவின் துறைமுக நகரம் என்றழைக்கப்படும் ஜெட்டாவில் (Jetta) உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
ஐபிஎல் மெகா ஏலம் (IPL 2025 Mega Auctiom) என்றாலே ஐபிஎல் தொடருக்கு நிகரான எதிர்பார்ப்புகளும், விறுவிறுப்பும் வந்துவிடும். அந்த வகையில், இந்த மெகா ஏலத்திற்கு பின் 10 அணிகளாலும் 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு அணி குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சம் 25 வீரர்களை வைத்திருக்க வேண்டும். 250 வீரர்களில் 46 பேர் தக்கவைப்பட்டுவிட்டதால், இந்த மெகா ஏலத்தில் 204 வீரர்கள் வரை எடுக்கப்படலாம். இதில் 70 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம்.
ஏலத்தில் மொத்தம் எத்தனை வீரர்கள்...?
ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சஹால், ஜாஸ் பட்லர், ககிசோ ரபாடா, லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், மிட்செல் ஸ்டார்க் என மொத்தம் 12 முக்கிய வீரர்கள் இரு செட்டுகளாக முதலில் ஏலம்விடப்படுவார்கள். மொத்தம் 1500க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தாலும் அணிகளின் பரிந்துரைகள் அடிப்படையில் மொத்தம் 577 வீரர்கள் இறுதிசெய்யப்பட்டனர்.
ஏலம் விடப்போகும் மல்லிகா சாகர்
கடந்த 2024 ஐபிஎல் மினி ஏலத்தை போல், இந்த முறையும் மல்லிகா சாகர் (Mallika Sagar) தான் வீரர்களை ஏலம்விட உள்ளார். இவர் மகளிர் பிரீமியர் லீக் (WPL) மற்றும் புரோ கபடி உள்ளிட்ட தொடர்களின் ஏலத்திலும் வீரர்களை ஏலம்விடும் பணியை மேற்கொண்டார். 577 வீரர்களில் 367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் அடக்கம். இந்த 577 வீரர்களும் ஏலம் விடப்பட இயலாது என்பதால் 116ஆவது வீரர் வரை ஒவ்வொரு செட்களாக நடைபெறும் ஏலம், அதன் பின் விரைவுப்படுத்தப்படும்.
விரைவுப்படுத்தப்பட்ட ஏலம்
விரைவுப்படுத்தப்பட்ட ஏலம் (Accelerated Auction) இரண்டு முறை நடைபெறும். முதல் விரைவுப்படுத்தப்படும் ஏலத்திற்கு, 117வது முதல் 577வது வீரர் வரை அணிகள் தேர்வு செய்து அளித்த பட்டியலின் அடிப்படையில் வீரர்கள் ஏலம்விடப்படுவார்கள். இதுவும் முடிந்த பின்னர், அதுவரை ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்களும், ஏலம் விடப்படாத வீரர்களும் ஏலம் விடப்படுவார்கள். தலா ரூ.120 கோடி என 10 அணிகளையும் சேர்த்து மொத்தம் ரூ.1,200 கோடி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 46 வீரர்களை தக்கவைத்தது போக மீதம் 10 அணிகளையும் சேர்த்து ரூ.641.50 கோடி இருக்கிறது. இந்த தொகை மூலமே 204 வீரர்களை வரை ஏலம் எடுக்கப்பட இருக்கிறது.
யார் யார் கையில் எவ்வளவு பணம்?
இதில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் ரூ.110.5 கோடி, ஆர்சிபி ரூ.83 கோடி, டெல்லி ரூ.73 கோடி வைத்திருக்கின்றன. அதேபோல், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.41 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.45 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.45 கோடி வைத்திருக்கின்றன. குஜராத் மற்றும் லக்னோ அணிகள் தலா ரூ.69 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.55 கோடியும், கொல்கத்தா அணி ரூ.51 கோடியும் வைத்திருக்கின்றன.
ஐபிஎல் ஏலத்தை எங்கு, எப்போது பார்ப்பது?
தற்போது ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் (Border Gavaskar Trophy) முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகே, ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய நேரப்படி இன்று மதியம் 3.20 மணிக்கு டெஸ்ட் போட்டி நிறைவடையும். தொடர்ந்து, 3.30 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கும்.
ஐபிஎல் மெகா ஏலம் இரண்டு நாள்களிலும் இரு அமர்வுகளாக நடைபெறும். முதல் அமர்வு மதியம் 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும். தொடர்ந்து, மதிய உணவு இடைவேளை மாலை 5 மணி முதல் மாலை 5.45 மணிவரை திட்டமிடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, இரண்டாவது அமர்வு மாலை 5.45 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணிவரை நடைபெறும். இந்த விரைவுப்படுத்தப்பட்ட ஏலம் இன்று இரவு 10 மணிக்கு பின் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனல்களுக்கு சந்தா செலுத்தியும் பார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ